states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா

ஒன்றிய பாஜக அரசு விரும்பியதால்தான் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடியது. இந்த நிலையில், இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டதாக, பாஜக பேசும் வீரத்தை நம்பி, தேசப்பற்றை மலிவுபடுத்தாதீர்கள்.

திரைக்கலைஞர்  பிரகாஷ்ராஜ்

பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு கிரிக்கெட் பந்து பதில். மணிப்பூர் காயங்களை ஆற்ற, வெறுமனே ஒரு நிகழ்ச்சி. உமர் காலித்துக்கு பிணை கிடைக்க விடாமல், நீதித்துறைக்கு கிடுக்கிப்பிடி. அமெரிக்காவின் வரி உயர்வுக்கு மட்டும் முழுமையாக சரண்டர். இவற்றை எதிர்த்து கேள்வி கேட்கும் யாரும் தேசவிரோதி.

 மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

மணிப்பூரின் பாஜக முதல்வர், ஆயுதங்களை பயங்கரவாதிகள் திருட அனுமதித்ததில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர். ரத்த களறியாக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி 800 நாட்களாக செல்லவில்லை. இப்போது அங்கு சென்றிருக்கும் மோடியை வரவேற்று குழந்தைகளை பாட வைக்கின்றனர். இவருக்கு கூச்சமே இல்லை. 

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

அனல் மின் நிலையம் அமைக்க பீகார் விவசாயிகளின் நிலத்தை 1 ரூபாய் மதிப்புக்கு பாஜக அதானிக்கு வழங்குகிறது. அந்த நிலத்தில் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரம் அதே பீகார் மக்களுக்கு ஒரு யூனிட் 6.75 என்கிற விலையில் கொடுக்கப்படும். நண்பரான அதானிக்காக பீகாரை சூறையாடுகிறார் மோடி.