தில்லியில் தலைகாட்டிய வானம்
புதுதில்லி : தேசிய தலைநகர் தில்லி கடந்த 4 மாதங்களாக காற்று மாசால் தவித்து வருகிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 350க்கும் கீழே சரிந்துள்ளது. ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தில்லி மக்கள் மூச்சு விட முடியாமலும், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளாலும் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் காற்று மாசுக்கு அஞ்சி வெளிமாநிலங்களில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில், தில்லி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வெள்ளியன்று அங்கு மழை பெய்தது. தில்லியில் இந்தாண்டின் முதல் மழையாக பதிவானதுடன், மாநிலத்தில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது. இந்த மழையால் காற்றின் மாசு சற்று குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
