55 கி.மீ., நடைபயணம் ; 50,000 பேர் பங்கேற்பு; 7 மணிநேரம் பேச்சுவார்த்தை மகாராஷ்டிராவில் சிபிஎம் போராட்டம் மாபெரும் வெற்றி
பால்கர் வாதவன் மற்றும் முர்பே துறைமுகத் திட்டங் களை ரத்து செய்தல்; சாகுபடி செய்பவர் களுக்கு நில உரிமை வழங்குதல்; மக்கள் விரோத ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் சரோட்டி யில் ஜனவரி 19ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மாபெரும் நடை பயணம் துவங்கியது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, மாதர் சங்கம், வாலி பர் சங்கம், மாணவர் சங்கம், ஆதிவாசி அதிகார ராஷ்டிரிய மஞ்ச் (ஏஏஆர்எம்) ஆகிய அமைப்பு களின் ஆதரவு, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமையை பறைசாற்றியது. பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களி லிருந்தும் 50,000க்கும் மேற்பட் டோர் இந்த நடைபயணத்தில் பங்கேற்றனர். இரவு, பகலாக சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நெடும் பயணத்தில் விவசாயிகள், பழங்குடியின மக்கள் போராட்டத் தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தனர். பணிந்த பால்கர் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தின் மூன்றாவது நாளான ஜனவரி 21 அன்று பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் முன், மாவட்ட ஆட்சியரகம் சிபிஎம் தலைவர் களை பேச்சுவார்த்தைக்கு அழைத் தது. இந்தப் பேச்சுவார்த்தையில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே, மாநிலச் செயலாளர் அஜித் நவாலே, சிஐடியு மாநிலச் செயலாளர் வினோத் நிகோலே, ஏஏஆர்எம் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரண் கஹாலா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அடங்கிய சிபிஎம் குழு வினர் பால்கர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இந்து ராணி ஜாக்கர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளு டன் 7 மணிநேரம் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் கோரிக்கை கள் குறித்து காலக்கெடுவுடன் கூடிய எழுத்துப்பூர்வ உறுதி மொழிகளை வழங்கியதை அடுத்து, ஜனவரி 21 நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்களின் உற் சாகமான வெற்றிக் கொண்டாட்டங் களுக்கு மத்தியில், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிபிஎம் தலைவர்கள் அறிவித்தனர். எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (FRA) அமல்படுத்துவதில் ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. மக்களின் தொடர் அழுத்தத்தால் ஏப்ரல் 30, 2026-க்குள் நிலுவையில் உள்ள அனைத்து வன உரிமை கோரிக்கைகளையும் தீர்க்க மாவட்ட ஆட்சியர் ஒப்புக்கொண் டார். பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் நிலத்தை விட மிகக் குறைவான நிலம் ஒதுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையில், நிலங்களை நேரில் ஆய்வு செய்யவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. சாகுபடி செய்பவர்களுக்கே நில உரிமை ஜமீன்தார் நிலங்கள், கோவில் நிலங்கள், இனாம் நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் பினாமி நிலங் களை உண்மையாகச் சாகுபடி செய்பவர்களின் பெயரில் பதிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்காக கூடுதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிபிஎம் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது. முந்தைய போராட்டங்களின் போது அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் பல ஆண்டு களாகத் தள்ளிப்போடப்பட்ட நிலையில், தற்போது எடுக்கப் பட்டுள்ள இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகும். மக்கள் பிரச்சனைகளில் நடவடிக்கை மக்களின் தீவிர போராட்டத்தின் விளைவாக, அணையில் உள்ள தண்ணீரில் உள்ளூர் மக்களின் உரிமை, குடிநீர் மற்றும் பாச னத்திற்கு முன்னுரிமை, வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், பெசா (PESA) சட்ட அமலாக்கம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஏழை களுக்கு வீடு, ரேஷன் முறையில் ஊழலைத் தடுத்தல், பள்ளிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்தல் ஆகிய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. பாஜக அரசுகளுக்கு எச்சரிக்கை தொழிலாளர் சட்டத் தொகுப்பு களைத் திரும்பப் பெறுதல், பழைய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங் களை மீண்டும் கொண்டு வருதல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதி லாகக் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத விபி-ஜி-ராம் ஜி திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கை கள் இந்த போராட்டத்தின் மூலம் வலுவாக முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தின் தீவிர உணர்வுகளை மேலிடத்திற்குத் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் தீவிரமடை யும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தி டம் இருந்து பெறப்பட்ட இந்த வெற்றிகள் முக்கியமானது என்றா லும், மாநில அளவிலான பல கோரி க்கைகள் இன்னும் தீர்க்கப்படா மல் உள்ளன. விவசாயிகளுக்கும் தொழி லாளர்களுக்கும் எதிரான அனைத்துக் கொள்கைகளும் தோற்கடிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தானே - பால்கர் மாவட்டச் செயலாளர் கிரண் கஹாலே அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
