tamilnadu

img

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வேலை வழங்கும் முறைகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை மாநில அரசுகளே வகுத்துக்கொள்ளும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் இந்தத் திட்டம், மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடரப்பட வேண்டும் என்றும், புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரக மக்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு அடித்தளமாக விளங்கும் இந்தத் திட்டத்தில், ஒன்றிய அரசு எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளும் முன் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது