tamilnadu

img

சவுக்கு தோப்பு கொலை வழக்கு பெண் உட்பட 9 பேர் கைது  

சவுக்கு தோப்பு கொலை வழக்கு பெண் உட்பட 9 பேர் கைது  

சிசிடிவி மூலம் துப்புதுலக்கிய காவல்துறை விழுப்புரம், மார்ச் 10- விழுப்புரம் மாவட்டம், வேடாளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் சவுக்கு தோப்பில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடற்கூறாய்வு முடிவில் அது கொலை என்பது உறுதியானதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொல்லப்பட்ட வர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பது தெரியவந்தது. விசாரணையில், ஜெயகுமாரின் காதலி பூஜா, தனது முன்னாள் காதலன் தேவா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்தது அம்பலமானது. அய்யப்பன் என்பவரது உறவினர் வேலை செய்யும் சவுக்கு தோப்பிற்கு ஜெயகுமாரை வரவழைத்து, அவர்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இவ்வழக்கில் பூஜா(21), தேவா(24), அய்யப்பன்(24), துர்கா(19), குரு(19), சடையாண்டி(64), பூங்காவனம்(54) மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிய உதவிய சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்