திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (மார்ச் 10) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், தெள்ளார், செய்யார் ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
