tamilnadu

img

தமிழ் வழிக் கல்வி முன்னுரிமை தொடர்பான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

அரசுப் பணிகளுக்கு இனி புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமுன்வடிவு குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளிக்கப்பட்ட போது, முன்பே அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த விதிமுறை பின்னோக்கி (retroactive) அமல்படுத்தப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக பின்பற்றும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதோடு, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக இல்லாத வகையில் தெளிவான சட்ட அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விவாதங்களுக்குப் பின் இந்த சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.