tamilnadu

img

விளையாட்டு உபகரணங்கள்  கடலூர் மாநகராட்சி மேயர் வழங்கினார்  

விளையாட்டு உபகரணங்கள்  கடலூர் மாநகராட்சி மேயர் வழங்கினார்  

கடலூர், மார்ச் 10-  கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு தமிழக அரசின் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய் கிழமை வழங்கினார். கிரிக்கெட், வாலிபால், புட்பால், கேரம்போர்டு, செஸ் போர்டு, பேட்மிட்டன், உள்ளிட்ட 30 வகையான  விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள் மூன்று செட்டுகள் வீதம் 45 வது வார்டுகளுக்கும் வழங்கப்பட்டன. நகரப்புற பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்திடும் வகையில் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் முஜிப்பூர் ரகுமான் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.