tamilnadu

img

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேவை மேம்படுமா?

உளுந்தூர்பேட்டை, ஜூலை 11- உளுந்தூர்பேட்டை நகரில் இருக்கும் வங்கிகளில் முதலில் தொடங்கப்பட்ட வங்கிக் கிளை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியாகும். விருத்தாசலம் சாலையில் உள்ள இவ்வங்கியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அரசு ஊழி யர்கள், வணிகர்கள் கணக்கு வைத்துள்ளனர்.  ஆனால் இவ்வங்கிக்கிளை  நிர்வாகம் வாடிக்கையாளர்க ளுக்கு சேவை செய்யும் விதம் மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. பழம்பெரும் இந்த  வங்கிக் கிளையில் ஆயிரக்க ணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் நிலை யில்,  வங்கிக்கிளை செயல்படும் இடம் மிகக் குறுகிய கட்டடமாக உள்ளது. தினசரி வங்கி துவங்கும் நேரத்திற்கு முன்பும், மதிய உணவு இடைவேளைக்கு பின்பும் ஏராளமான வாடிக்கையாளர்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள் வங்கிக் கட்டிடத்திற்கு வெளியே வெயிலில் காத்துக் கிடக்கும் அவலநிலை உள்ளது. இவ்வளாகத்திலேயே இருக் கும் ஏடிஎம் அறை எப்போதும் இரு  சக்கர வாகனங்களால் சூழப்  பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை முறைப்படுத்த வங்கி யின் மேலாளர் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. மேலும்  ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும், விபரம் சோதித்தாலும் ஒன்றுக்கு நான்கு ரசீது வெளியே வருகிறது.  இப்படி ஏராளமான ரசீது காகிதம்  தேவையில்லாமல் வீணாகிறது. வங்கி நிர்வாகம் இதையும் சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வங்கியின்  மேலாளர் ஆண்டுக்கணக்கில் நீடிக்  கும் மேற்கூறிய குறைபாடுகளை நீக்கினால் சிறந்த சேவை புரி யும் வங்கியாக மாறும்.