tamilnadu

காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கியதில் ஊழல் 14 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை, பிப்.9- காவல்துறைக்கு தொழில்நுட்பக் கருவிகள் (வாக்கி- டாக்கி) வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி 14 காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை காவல்துறை தொழில்நுட்பப் பிரிவின் கீழ் காவல் துறையினருக்கு சிசிடிவி கேமரா, டேப்ளட் கணிணி, ஜிபி எஸ்,சிசிடிவி ஒளிப்பதிவு கருவி, பேட்டரிகள் ஆகிய தொலைத்தொடர்பு கருவிகள்,  வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்ட னர். அதில் கருவிகள் வாங்கியதில் தனியார் நிறுவனத்திட மிருந்து பணம் பெற்றுக்கொண்டு  சில அதிகாரிகள்  முறை கேட்டுக்கு துணை போனதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது. இந்தநிலையில், தொழில்நுட்பபிரிவு அப் போது தொழில்நுட்ப பிரிவு கண்காணிப்பாளராக இருந்த கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் 14 பேர் இரண்டு தனியார் நிறுவனத்தின் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில்  காவல்துறை அதி காரிகள் இல்லம், தனியார் நிறுவன அலுவலகங்கள் என 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவ ணங்கள் பல சிக்கியுள்ளதாக லஞ்சஒழிப்பு காவல்துறையி னர் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.