india

img

ஆசிரியர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல்.... தண்டனை முடிந்து விடுதலையாகும் ஓம் பிரகாஷ் சவுதாலா...

புதுதில்லி:
பாஜகவின் நீண்டகால கூட்டாளியும், ஊழல் வழக்கில் 9 ஆண்டாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஹரியானா முன்னாள்முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (86), விரைவில் விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனுமான ஓம் பிரகாஷ் சவுதாலா, 1999-2000 காலகட்டத்தில் ஹரியானா முதல்வராக இருந்தபோது, பல கோடிரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தகுதியற்ற 3 ஆயிரம் பேரை ஆசிரியர்களாக நியமித்தது தொடர்பான வழக்கில் சிக்கினார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர், தனது மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன், தற்போது தில்லி திஹார் சிறையில் தண்டனையைக் கழித்து வருகிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டுசிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்தாண்டு, மார்ச்சில் அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா பரவல் காலத்தில், அவரது பரோல் இருமுறை நீட்டிக் கப்பட்டது. தற்போது அவருக்கு மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது.இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஏழு முதல்10 ஆண்டு சிறைத் தண் டனை பெற்று ஐந்து மாதங்களே தண்டனைப் பாக்கிஉள்ளவர்களை விடுவிக்கதில்லி அரசு உத்தரவிட்டுள் ளதால், இந்தச் சலுகை மூலம்
சவுதாலாவும் முன்கூட் டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதலா, பாஜக கூட்டணியில் ஹரியானா மாநில துணைமுதல் வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.