கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனித்தனி மனுக்கள் மீதான விசாரணை இன்று(05.09.24) நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜுவும், கெஜரிவால் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்விவும் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.