சென்னை:
வெளிநாடுகளில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில், தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக்காவின் சியர்ரா லியோன் நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, ஆண்டியாபுரம் ஜெகவீரன்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், மலேசியாவின் ஜோகூர் பாருவில் இறந்தார். இவர்கள் இருவரது உடல்களையும் தமிழகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.