சென்னை:
தமிழகம் முழுவதும் 55 இடங்களில் 24 மணிநேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையங்களை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் நிலையில், மூன்றாவது அலையை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 24மணிநேரமும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மையங்கள் தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் திங்கட்கிழமை முதல் செயல்படத் துவங்கியுள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனியார் நிறுவன ஏற்பாட்டில் ரூ.1 கோடி மதிப்பில்ஆக்சிஜன் தயாரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதையும் அவர் துவக்கி வைத்தார். அப்போது அவர்பேசியதாவது:தமிழகத்தில் கொரோனா 2 ஆவதுஅலையின் போது ஆக்சிஜன் தேவையை சமாளிக்க சிரமம் ஏற்பட்டது.
எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, 17 ஆயிரத்து 940 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் கிடைத்துள்ளன.இதுதவிர ஆக்சிஜன் ஜெனரேட்டர், திரவ நிலை ஆக்சிஜன் தயாரிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் தன்னிறைவுபெற்றுள்ளது. அரசின் வற்புறுத்த லால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் குழந்தைகளை அதிகம்பாதிக்கும் என்று சந்தேகிக்கப்படுவதால் அனைத்து மாவட்டங் களிலும் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடியே 82 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள் ளது. 2 ஆவது தவணை போட வேண்டிய 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பல்லோ மருத்துவ மனையின் கையிருப்பில் இருக்கும்5 லட்சம் கோவாக்சின் ஊசியை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.