tamilnadu

பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம்

சென்னை, ஜூலை 8 - பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் 211 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறினார். பேரவையில் திங்களன்று (ஜூலை 8) நடைபெற்ற தமது துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதில ளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: பல்லாவரம் நகராட்சி யில் குடிநீர் தேவையை சமாளிக்க திரிசூலம் மலை கல்குவாரி நீராதாரங்களை கொண்டு  புதிய குடிநீர் திட்டம் 13.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்ப டும். சென்னை மாநகருக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கிடைக்க ஏதுவாக 114 நீர்நிலைகள் 100 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். 2ஆயிரம் இடங்களில் 12.52 கோடி செலவில் மழை நீர் சேகரிக்கும் கிணறுகள் அமைக்கப்படும். செனாய் நகர் அவசரகால மகப்பேரு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய மருத்துவமனை கட்ட ப்படும். 10 மண்டலங்களில் உள்ள சுகாதார பரிசோதனைக்கூடங்கள் பகுப்பாய்வுக் கூடங்களாக மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி யில் திறந்தவெளி நிலத்தில் 35 பூங்காக்கள் நிறுவப்ப டும். கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திரு வான்மியூர் ரயில் நிலையம் வரை பங்கிங்காம் கால்வாய் கரையில் சாலை மற்றும் மிதிவண்டி பாதை அமைக்கப்படும். 80கோடி ரூபாய் செலவில் மாம்பலம் கால்வாய் அழகுபடுத்தப்ப டும்.