states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாய் ஒன்றிய அரசு பறித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மாநில சுயாட்சியைக் காக்க அவர் நியமித்திருக்கும் உயர்நிலைக் குழுவை சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கிறது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் துர்கேஷ் பதக்

குஜராத் மாநிலத்திற்கு 2027ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்தில் பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை ஏவி வருகிறது. என் மீதான சிபிஐ சோதனை மிரட்டலுக்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். 

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

வக்பு மசோதாவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு எளிய கேள்வியைக் கேட்டிருக்கிறது. இந்து மத அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்கள் இடம்பெற அரசாங்கம் அனுமதிக்குமா என்கிற கேள்வி. இந்த கேள்விக்கு எவரிடமும் இதுவரை பதில் இல்லை.

அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ்

ஒருவேளை ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு பதிலாக ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் உலகையே ஆதிக்கம் செய்யும் அதிகாரத்துடன் இருந்திருந்தால், பெண்களின் அழகு குறித்த உலகத்தின் பார்வை வேறாக இருந்திருக்கும். கருப்பினப் பெண்களின் மென்மையான சருமத் தோற்றம் குறித்து கவிஞர்கள் கவிதை பாடியிருப்பார்கள்.