districts

img

பாதாள சாக்கடை திட்டம் : மதுராந்தகம் மக்களின் கனவு நிறைவேறுமா ?

செங்கல்பட்டு,டிச.31- மதுராந்தகம் நகராட்சியில் 40 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்க்கும் பாதாள சாக்கடை திட்டம் தாமதமாகி வருவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதைத் தொடர்ந்து, திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1974 ஆம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில்  சுமார் 20.46 சதுர கி.மீ. பரப்பள வுடன் 24 வார்டுகளை உள்ளடக்கி இரண்டாம் நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. நகரப்பகுதியில் மட்டும் மக்கள் தொகை சுமார் 50 ஆயிரமாக உள்ளது. நகரப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம் 40 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளின் நடுவே உள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா கூறியதாவது: மதுராந்தகம் நகரின்  பல்வேறு பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அப்துல்கலாம் நகர், சூரக் கோட்டை, காந்தி நகர், கடப்பேரி ஆகிய  பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. குடியிருப்பு கள் மற்றும் வணிக நிறுவனங்களி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வீடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் முக்கிய சாலை களில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதாரச் சீர் கேட்டுடன், கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட  பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.    சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  பி.மாசிலாமணியிடம் கூறுகையில், மதுராந்த கம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கடந்த 2006-ம் ஆண்டு ரூ.12 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அதிகாரிகள் திட்டத்தின் வரைபடத்தை தயார் செய்து எங்க ளிடம் காட்டினர்  மேலும், நகராட்சியின் பங்களிப்பு தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டதும்.  சுத்திகரிப்பு நிலையம் அமைப்ப தற்காக மாம்பாக்கம், கருங்குழி பகுதிக ளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசின்  ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இப்பகுதிகளில்  அமைக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப் ்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்துவது அல்லது மதுராந்தகம் ஏரி உபரி நீர் செல்லும் ஆற்றில் விடுவது என திட்டம் தயார் செய்யப்பட்டது.  ஆனால், ஆண்டுகள் பல  கடந்தும் அரசிடமிருந்து எந்தவிதமான அறிவிப்புகளும் வரவில்லை என்றனர். மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில்  பாதாள சாக்கடை திட்டம் இன்றியமையாத திட்டமாக மாறிவிட்டது உடனடியாக அரசு இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து, மதுராந்தகம் நகராட்சியின் ஆணையரிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை திட்டம்  தொடர்பாக அறிவிப்புகள் ஏதும்  வரவில்லை. பழைய நிலையே தொடர்கிறது என்றார். - கே.பார்த்திபன்