education

img

பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், கலந்தாய்வு வரும் ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 - ஆகஸ்ட் 19, சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 - ஜூலை 11 மற்றும் துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.