education

img

வாட்ஸ்அப் மூலம் ஜூனியர் மாணவர்களை துன்புறுத்தினாலும் ராகிங்தான்! - யுஜிசி

கல்லூரிகளில், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங்காகதான் கருதப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி,
கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்கள், சீனியர் மாணவர்களால் ராகிங் செய்யப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான புகார்கள் யுஜிசி-க்கு வந்துகொண்டிருக்கிறது. இதில் பல நேரங்களில் சீனியர் மாணவர்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் போன் அழைப்புகள் மூலம் ஜூனியர் மாணவர்களை மனரீதியாக துன்புறுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஜூனியர் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங்காகதான் கருதப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்களை கண்காணித்து ராகிங் எதிர்ப்பு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.