tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களின் வீரம் செறிந்த வெற்றிக்கு சிஐடியு மாநாடு பாராட்டு!

சாம்சங் தொழிலாளர்களின் வீரம் செறிந்த வெற்றிக்கு சிஐடியு மாநாடு பாராட்டு!

விசாகப்பட்டினம், ஜன. 2 - “இந்தியாவின் சட்டங்களையும், தொழிலாளர் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்க நினைக்கும் எந்த வொரு பன்னாட்டு நிறுவனமும் இங்கு வெல்ல முடியாது!’ என்பதைத் தமிழ கத்தின் ‘சாம்சங்’ தொழிலாளர்கள் நிரூபித்துள்ளனர்” என சிஐடியு அகில இந்திய மாநாடு பாராட்டியுள்ளது. இதனை பொதுச்செயலாளர் தபன்  சென், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மிகுந்த உற்சாகத்து டனும், உணர்ச்சிகரமாகவும் தெரிவித் தார்.  விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சிஐடியு-வின் 18-வது அகில இந்திய மாநாட்டின் மூன்றாம் நாள் அமர்வின் இடையே, ‘சாம்சங்’ தொழி லாளர்களின் போராட்ட வெற்றியை ஒரு வரலாற்றுச் சாதனையாக முன்வைத்து தபன் சென் ஊடகங்களுக்குப் பேட்டி யளித்தார். தமிழக மண்ணில் எழுதப்பட்ட புதிய வரலாறு! “தமிழகத்தின் திருப்பெரும்புதூர் மண்ணில் ‘சாம்சங்’ தொழிலாளர்கள் நடத்திய ஒருமாத காலப் போராட்டம், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தி யாயத்தை எழுதியுள்ளதாக தபன் சென் குறிப்பிட்டார். தொழிற்சங்கம் அமைக் கும் அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்க மறுத்த நிர்வாகத்தின் பிடிவாதத்தை, தொழிலாளர்களின் தள ராத உறுதியும் சிஐடியு-வின் நேரடித் தலையீடும் தகர்த்தெறிந்தன. இந்த வெற்றி, வெறும் ஊதிய உயர்வுக் கானது மட்டுமல்ல, அது தொழிலாளர் களின் சுயமரியாதைக்கும் ஜனநாயக உரிமைக்குமானது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய ஒட்டுமொத்த தமி ழகத் தொழிலாளர்களுக்கும், சர்வதேச அளவில் ஆதரவுக்கரம் நீட்டிய தென் கொரிய ‘சாம்சங்’ தொழிற்சங்கத்திற் கும் மாநாடு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது” என தபன் சென் கூறினார். விசாகப்பட்டினம் எஃகு ஆலை: ஒரு திட்டமிட்ட சதி! விசாகப்பட்டினம் எஃகு ஆலை குறித்துப் பேசிய அவர், அந்த ஆலை யைத் தனியார்மயமாக்க ஒன்றிய அரசு மிகவும் கீழ்த்தரமான சதிவேலை களில் ஈடுபட்டு வருவதாகச் சாடினார். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திட்ட மிட்டே கச்சாப் பொருட்களை வழங்கா மல் தடுத்தும், இயந்திரங்களைச் சேதப் படுத்தியும், தொழிலாளர்களுக்கு ஊதி யத்தை மறுத்தும் ஆலையை நஷ்டத் தில் தள்ள ஒன்றிய அமைச்சகம் முயன்று வருகிறது. “ஆலையை விற் கவே இத்தகைய செயற்கையான நெருக் கடியை அரசு உருவாக்குகிறது. ஆனால், தன் ரத்தத்தையும் வியர்வை யையும் சிந்தி இந்த ஆலையை உரு வாக்கிய தொழிலாளர்கள், ஒன்றிய அர சின் இந்தத் தேச விரோதச் சதியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” என தபன் சென் எச்சரித்தார். மின்சாரத் திருத்தச் சட்டம்:  விவசாயிகளுடன்  இணைந்து ஒரு போர்! ஒன்றிய அரசின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் என்பது சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்களைக் கார்ப்பரேட்களுக் குத் தாரை வார்க்கும் ஒரு பகல்