சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக அரங்கேறும் பெரும்பாலான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த இந்தியக் குடிமக்களே ஆவர். சங் பரிவாரத்தால் தூண்டிவிடப்பட்ட கும்பல் வெறிக்கு மேலாக, சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டும்.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
பீகாரில் திருமணம் செய்வது மிக எளிது ; பீகார் பெண்களின் விலையே 20,000 முதல் 25,000 ரூபாய் தான் என உத்தரகண்ட் மாநில பாஜக அமைச்சர் ரேகா ஆர்யாவின் கணவர் கிர்தாரி லால் சாஹு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். எதிர்ப்பு கிளம்பியவுடன் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு காவலர் என சாஹு கூறி வருகிறார்.
ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் காஞ்சனா
ம.பி.யில் விஷத்தன்மை கொண்ட குடிநீரைக் குடித்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி கூட கேட்கக்கூடாதா? கடந்த 11 ஆண்டுகளாக ‘கோடி மீடியா’ கேள்வி கேட்காமல் இருந்ததால், பாஜகவினர் தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள். யாராவது கேள்வி கேட்டால், பாஜகவினர் மிரட்டுகின்றனர்.
திரைக்கலைஞர் சுனில் ஷெட்டி
ஒரு புகையிலை விளம்பரத்தில் நடிக்க ரூ.40 கோடி பணம் வந்தது. எனக்கு அந்த பணம் தேவை தான். ஆனால் இதற்காகவெல்லாம் நடிக்க மாட்டேன். என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டேன். அதே போல தான் மக்களின் நலனும்.
