tamilnadu

img

ராஜஸ்தானில் காவல்துறை தாக்குதல் : 20 பேர் கைது

ராஜஸ்தானில் காவல்துறை தாக்குதல் : 20 பேர் கைது

ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் சோமு அருகே உள்ளது பதான் மொஹல்லா. இங்கு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரு கின்றனர்.  இந்நிலையில், பதான் மொஹல்லாவின் மசூதி அருகே நீண்ட காலமாக செயல்பட்டு வரும் 20 இறைச்சிக் கூடங்களுக்கு ராஜஸ்தான் பாஜக அரசு சமீபத்தில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் காரண மாக டிச., 26 அன்று அதிகாலை சோமு பெருந்து நிலையம் அருகே வன்முறை வெடித்தது. காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட இந்த வன் முறையில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. காவல்துறை, பொதுமக்கள் என இரண்டு தரப்பினரும் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  சிபிஎம் தூதுக்குழு இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப் பட்ட பதான் மொஹல்லா பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழு வியாழ னன்று சென்றது. இந்தக் குழுவில் சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி., ஜெய்ப்பூர் மாவட்டச் செயலாளர் டாக்டர் சஞ்சய் மாதவ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுமித்ரா சோப்ரா, அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஹரிசங்கர் மாண்டியா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மொஹ்சின் பதான் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்துகொண்டனர். வீடுகள் இடிப்பு கல்வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 20 பேரின் வீடுகள் வெள்ளியன்று இடிக்கப்பட்டன. ஆனால் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து பதில் அளிக்கக்கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு விளக்கம் எதுவும் கிடைக்காததால் வீடுகள் இடிக்கப்பட்டது என ராஜஸ்தான் அரசு அதிகாரிகள் மழுப்பலாகக் கூறினர்.