இனவெறித் தாக்குதலுக்கு எதிராக தில்லியில் மாணவர்கள் போராட்டம்
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் இனவெறித் (சீனாவைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டி) தாக்குதலில் உயிரிழந்த திரிபுராவைச் சேர்ந்த 24 வயது மாணவர் அஞ்சல் சக்மா மரணத்திற்கு நீதி கோரி, தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வியாழனன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாநில மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று, அஞ்சல் சக்மாவின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக,”இனவெறி ஒரு நோய், அதை வேரோடு அழிக்க வேண்டும்” என போராட்டத்தின் போது முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
