states

தீக்கதிர் விரைவு செய்திகள்

போபால் பாஜக அமைச்சர் விஜய் வர்கியாவிற்கு ஆதரவாக டுவிட்டை நீக்கிய என்டிடிவி

பாஜக ஆளும் மத்தியப்பிர தேசம் மாநிலத்தின் இந்தூ ரில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரண மாக 11க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த னர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சையில் உள்ள னர். 2000க்கும் மேற்பட்டோர் வாந்தி,  மயக்கம் போன்ற சாதாரண உடல்நலக் குறைபாடால் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதானி க்குச் சொந்தமான என்டிடிவி (NDTV) செய்தி நிறுவனத்தின் நிருபர் மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் வர்கியாவிடம், “என்ன நடந்தது?” என  கேள்வி எழுப்பினார். ஆனால் விஜய் வர்கியா, “பயனற்ற குப்பை விசயங்கள் தொடர்பாக கேட்காதீர்கள்” என அடா வடியாக பதில் அளித்தார். மேலும் என்டி டிவி பத்திரிகையாளருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது நிறுவன பத்திரி கையாளருக்கு ஆதரவாக இருக்காமல், பாஜக அமைச்சர் விஜய் வர்கியாவை கேள்வி கேட்ட டுவிட் மற்றும் செய்தி தொகுப்பை சமூகவலைதளங்களில் இருந்து என்டிடிவி நிறுவனம் நீக்கி யுள்ளது. அதே போல கேள்வி கேட்ட பத்திரிகையாளரை விரைவில் பணியில் இருந்து விடுவிக்கவும் என்டிடிவி நிறு வனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லக்னோ உ.பி.,யில் மத வன்முறையை தூண்டும் சதி முறியடிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மத வன்முறையை தூண்டும் நோக்கத்தில் கோவில் ஒன்றில் வெளியே வைக்கப் பட்டுள்ள சிவலிங்கம் மர்மமான முறையில் சேதப்படுத்தப்பட்டது.  சிவலிங்கத்தை முஸ்லிம்கள் தான் சேதப்படுத்தினர் என சமூகவலை தளங்களில் இந்துத்துவா குண்டர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள, பிஜ்னோர் மாவட் டத்தில் பதற்றமான சூழல் உருவாகி யது. ஆனால் கோவிலின் சிசிடிவி காட்சி களை காவல்துறை ஆய்வு செய்த பிறகு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சிவ லிங்கத்தை உடைக்கவில்லை என்றும், இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த விடித் ராஜ்புத் என்ற நபர் தான் சிவலிங்கத்தை உடைத்தது அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் பிஜ்னோரில் மத வன்முறையை தூண்டும் இந்துத்துவா குண்டர்களின் சதி முறியடிக்கப்பட்டது.