மதநல்லிணக்கம் காப்போம் பிரச்சாரம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. துவக்கி வைத்தார்
திண்டுக்கல்லில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, ‘மக்கள் ஒற்றுமை மேடை’ சார்பில், அனைத்துச் சமயத்தினரும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்தப் பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். பங்குத் தந்தை பிலிப் சுதாகர், மாமன்ற உறுப்பினர் முகமது இலியாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ஏ. அரபு முகமது, மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டத் தலைவர் டாக்டர் அமலாதேவி, மாவட்ட அமைப்பாளர் கே.எஸ். கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
