states

img

கேரளத்தில்  எளிய மக்களுக்கும் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

கேரளத்தில்  எளிய மக்களுக்கும் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

 “வைப் 4 வெல்  னஸ் (Eat Well, Act Well, Sleep Well, Care Well -  4 முக் கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் விழிப்புணர்வு) பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன், விழாவில் மேலும்  பேசுகையில், “ஆர்த்ரம் மிஷன் மூலம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூ ரிகள் வரை, உலகத் தரத்திற்கு மேம்படுத்த முடிந்துள்ளது. அரசு மருத்துவமனை களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட விலையுயர்ந்த சிகிச்சைகளை சாமானிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம். புற்றுநோய் சிகிச்சை வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும், சிகிச்சைக்கான செல வும் குறைக்கப்படும். ஆய்வகங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் மூலம்  நவீன சோதனை முறைகள் உறுதி  செய்யப்படும். மேம்பட்ட வைராலஜி நிறுவனம் அதிநவீன ஆய்வக வசதிகள் மற்றும் தொற்று நோய் கண்டறிதலுக்கான ஆராய்ச்சி அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதில் கேரளா நாட்டிலேயே முத லிடத்தில் உள்ளது” என அவர்கூறினார்.