சென்னை, பிப். 15 - பாலவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைதிட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னைமாநகராட்சி 183ஆவது வட்ட திமுக வேட்பாளர் டாக்டர் தமிழரசி சோமு வாக்குறுதி அளித்து ள்ளார். பெருங்குடி பேசிட்டேஷியா நிறுவனத் தின் தொழிலாளியாக, தொழிற்சங்கத் தலைவராக இருந்து செயலாற்றியவர் பாலவாக்கம் சோமு. 1996 - 2001 வரை பாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலை வராக இருந்தார். தற்போது திமுக-வின் சட்ட திருத்தக் குழுச் செயலாளராக உள் ளார். இவரது மகள் டாக்டர் தமிழரசி சோமு 2006-2011 ஆண்டில் பாலவாக்கம் ஊராட்சிமன்றத் தலைவ ராக செயல்பட்டார். பாலவாக்கம் பகுதி யில் நன்குஅறிமுகமான தமிழரசி சோமு, தற்போது மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக183ஆவது வட்டத்தில் களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், வட்டச் செயலாளர் பி.எஸ்.ஆறுமுகம், தென்சென்னை தெற்கு மாவட்டப் பிரதிநிதி விஜயபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின ரோடு தீவிர வாக்கு சேகரிப் பில்ஈடுபட்டுள்ளார். ஊராட்சித் தலைவராக இருந்தபோது, சாலை, கழிவு நீர்க் கால்வாய், கடற்க ரைக்கு செல்ல இணைப்பு சாலை, பூங்காக்கள் அமைத் தது, தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தது, ஒரே வளாகத்திற்குள்ஆரம்ப சுகாதாரநிலையம், அஞ்சல கம், இசேவை மையம், நியாயவிலைக் கடை கொண்டு வந்தது போன்ற சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வரு கிறார். சோமு கிளினிக் வைத்து 12வருடமாக மக்கள் சேவை செய்துவருவது, கொரோனா காலத்தில்வழங்கிய இலவச சேவைகள் போன்றவற்றை எடுத்துக் கூறியும் வாக்கு கேட்கிறார்.
வாஞ்சையோடு அவரை மக்கள் வரவேற்று ஆரத்தி எடுத்து, பூ தூவி ஆதரவை தெரிவிக்கின்றனர். பிரச்சாரத்தில் பேசும் அவர், சென்னை மாநகராட் சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் போதிய உட்கட்ட மைப்பு பணிகளை செய்ய வில்லை. இதனால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதி களில் பாதாள சாக்கடை கட்டமைப்பு இல்லை. எனவே, ஒருங்கிணைந்த வகையில் 183ஆவது வட்டத்திற்கும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து, பாதுகாக்கப்பட்டகுடிநீர் வழங்கப்படும். மழைநீர் வடி கால்வாய் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்து, தண்ணீர் தேங்காத வகை யில் அமைக்கப்படும். நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களின் நிதிகளை பெற்று அவற்றை முறையாக செய்வேன். குறிப்பாக, சாலைகள் சீரமைக்கப்படும். அரசு திட்ட ங்கள் முறையாக பயனாளி களைசென்றடைய நட வடிக்கை எடுப்பேன் என்று கூறும்அவர், கடற்கரையோரம் மணல் அரிப்பை தடுக்க சுற்றுச்சுவர் கட்டியதால் சுனாமியின் போது பாலவாக்கம் பகுதியில் அதிக சேதாரம் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் பாராட்டுக்களை பெற்ற தைப்போல்தொடர்ந்து செயலாற்றுவேன். குடிமனைப் பட்டா கிடைக்க தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக,30வருடமாக மீனவமக்கள் குடிமனைப் பட்டா பெற்றுத்தர முன்னு ரிமை அளிக்கப்படும். பள்ளி கள் மேம்படுத்தவும், தேவை யான இடங்களில் பூங்காக் கள்,விளையாட்டு திடல் கள் உருவாக்கவும், மின்விளக்குகளை சீரமைக் கவும் பாடுபடுவேன். பாலவாக்கம் பகுதி யை பூர்வீகமாக கொண்ட தால் ஒவ்வொரு தெரு விலும் உள்ள பிரச்சனைகள், செய்ய வேண்டியபணிகள் குறித்து அறிந்துள்ளேன். அதனை நிறைவேற்றுவேன் எனவும் உறுதி அளித்து வாக்கு கேட்கிறார்.