மேற்குவங்கத்தில் சிபிஎம் ஒற்றுமை ஊர்வலம்
மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் மால்டா மாவட்டத்தின் மாணிக்சாக் பகுதியில் சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றுமை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்நிகழ்வுகளில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான முகமது சலீம், மத்தியக் குழு உறுப்பினர் சுமித் தே, மால்டா மாவட்டச் செயலாளர் அம்பர் மித்ரா உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.