மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயமானது
பதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மோடி அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் கண்டனம் தெரிவித்ததால், புதிய கல்விக் கொள்கை யில் இந்தி கட்டாயம் இல்லை என மழுப்பி வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு உள் ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கல்வி தொடர்பான நிதியை தர முடியாது என அடாவடி செயல்களில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட் டுள்ளது. இதனை தொடர்ந்து அம்மாநில பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கற்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதாவது மராத்தி, ஆங்கி லத்தைப் போல 3ஆவது மொழி பாடமாகி யுள்ளது இந்தி. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக முள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டா யமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.