ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 92 ஆண்டுகால நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
தெலுங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ஆம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில் ஆப்பிள் ஸ்டோர் அருகே 4000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது.