மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்
2 மாத இடைவெளியில் அசாம் மாநிலத்தில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கனமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ராணுவத்தினர் அசாம் மாநிலத்தில் மையம் கொண்டுள்ளனர்.