கேரளத்தின் இரண்டாவது மிக நீண்ட கால முதலமைச்சர்
வரலாறு படைத்த பினராயி விஜயன்
கேரளத்தில் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த முதல மைச்சர்களில் பினராயி விஜயன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஏப்.16 புதனன்று முதலமைச்சராக 3,246 நாட்களை நிறைவு செய்த பின ராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் இ.கே.நாயனாருக்குப் பின்னால் அந்த இடத்தைப் பிடித்த கே.கருணாகரனின் சாதனையை முறியடித்தார். இ.கே. நாய னார் தான் அதிக காலம் முதலமைச்சர் பதவியில் இருந்தவர். நாயனார் மூன்று அமைச்சகங்களில் 4,009 நாட்கள் முத லமைச்சராக இருந்தார். தொடர்ச்சியாக முதலமைச்சர்.. தொடர்ந்து மிக நீண்ட காலம் முத லமைச்சராக பினராயி விஜயன் இருந்துள்ளார். இந்தச் சாதனை 2022 நவம்பர் 14 அன்று எட்டப்பட்டது. 1970 அக்டோபர் 4 முதல் 1977 மார்ச் 25 வரை 2,364 நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் சி. அச்சுதமேனன். இந்தச் சாதனையை ஏற்கனவே பினராயி விஜ யன் முறியடித்தார்.