கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க மோடி - அமித் ஷா கூட்டுச் சதி
மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக பிர தமர் மோடியும் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர் என காங்கி ரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில், “காங்கிரஸ் கட்சியின் தலை வர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி யும் தேசத்துக்காக உயிரையே தியாகம் செய்தனர். ஆனால் 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி, நாட்டுக்காக என்னதான் செய் தார்? வருமான வரித்துறை, அமலாக் கத்துறை ஆகியவை மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டுவதைத்தான் ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் தலைவர் கள் வீடுகளில் எந்த நேரத்திலும் அம லாக்கத்துறையும், வருமான வரித்துறை யும் சோதனை நடத்தலாம். இது எல்லாம் மோடி- அமித் ஷாவின் சதித் திட்டம் தான். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் மோடி யும் அமித் ஷாவும் தீவிரமாக உள்ள னர். ஆகையால் முதலமைச்சர் சித்த ராமையாவும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந் தால் எதுவும் செய்ய முடியாது. நாட்டின் வளச்சிக்கு மோடியால் எதுவும் செய்ய முடியவில்லை. அம்பேத்கர் பெயரை கூட மோடி மறந்தும் சொல்வது இல்லை; ஆனால் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டும் அம்பேத்கரை கையில் எடுத்துக் கொள்கிறார் மோடி. அதே அம்பேத்க ரின் அரசியல் சாசனத்துக்கு எதிராகவே மோடி செயல்பட்டும் வருகிறார்” என அவர் கூறினார்.