tamilnadu

img

தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991-1992 கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டிற்கு ரூ.1,000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இந்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை (நவ. 29) அன்று நடைபெறவிருந்தது. 'டிட்வா’ புயல் காரணமாக தேர்வு டிச.6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.