tamilnadu

img

வட தமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல் கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வட தமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல் கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னை, நவ. 27 - தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம், ‘டிட்வா’  புயலாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நுங்கம் பாக்கம் சாலையில் உள்ள  தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தில் இந்திய வானிலை ஆய்வு  மையத்தின் தென்மண்டல தலைவர்  அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கே சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயம் மையம் கொண்டுள்ளது” என்றார். இந்த புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை - காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நவம்பர் 30 அன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்றும் அவர் கூறினார்.  சிவப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை இந்த புயல் காரணமாக, வெள்ளிக்கிழமை (நவ. 28) அன்று திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 4  டெல்டா மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக் கப்பட்டுள்ளது.  இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மிக  கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் கடலூர், பெரம்பலூர், மதுரை,  விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங் களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக பாம்பன் நாகப்பட்டினம், தூத்துக்குடி மற் றும் காரைக்கால் துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை (நவ. 29) அன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயி லாடுதுறை, கடலூர், செங்கல் பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங் களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் அதி கனமழைக் கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை புயலின்போது, காற்றின் வேகம்  படிப்படியாக அதிகரிக்கும். காற் றின் வேகம் காரணமாக பாதிப்பு அதி கமாக காணப்படும் என்றும் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக நவம்பர் 29 அன்று காலை முதல் 30-ஆம் தேதி வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்பதால், தெற்கு ஆந் திர கடலோரப் பகுதிகளில் உள்ள ஆழ் கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். டிட்வா புயலின் தாக் கம் சென்னையில் குறைவாகத்தான் இருக்கும் என்றும் அமுதா தெரிவித்தார்.