tamilnadu

img

அபாயகரமான தொழில்களில் பெண்களை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும்! நவ. 29 - மாநிலம் முழுவதும் உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம்

அபாயகரமான தொழில்களில் பெண்களை  அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும்! நவ. 29 - மாநிலம் முழுவதும் உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 27 - அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனு மதிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘வரைவுச் சட்டத் திருத்த அறிவிப்பாணை’யைத் திரும்ப பெற வேண்டுமென்று உழைக்கும் பெண்கள் வலியுறுத்தி உள்ளனர். மின்னாற்பகுப்பு, கண்ணாடி உற்பத்தி, ஈயம் தொழில்கள், வாயு மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி, சாய உற்பத்தி, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ரசாயனங்களை கலக்கும் வேலை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்தி போன்ற 20 தொழில்களில் பெண்கள் ஈடுபட தமிழ்நாடு தொழிற் சாலைகள் சட்டம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தகைய ஆபத்தான தொழில்களில் பெண் களை பணியமர்த்தும் வகையில் மாநில அரசு ‘வரைவுச் சட்டத் திருத்த அறிவிப்பாணை’யை அக்டோபர் 1 அன்று வெளியிட்டது. இதன்மீது 45 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களின் உழைக்கும் பெண்கள் அமைப்புகள் சார்பில்  வியாழனன்று (நவ.27) சென்னை யில் செய்தியாளர் சந்திப்பு நடை பெற்றது.  அப்போது பேசிய மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, “மாநில அரசு, தொழிற் சங்கங்களைக் கலந்து ஆலோசிக்கா மல் இந்த வரைவு அறிக்கையை ரகசியமாக கொண்டு வந்துள்ளது. இரவு நேரத்தில் பெண்களை வேலை வாங்கலாம் என்பன போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் உள்ளன. எனவே, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 29  அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாநிலம் முழு வதும் இந்த கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு கூறுகையில், “தமிழகத்தில் 50 சதவிகித  பெண் களுக்கு ரத்தச் சோகை உள்ளது.  இந்நிலையில், ஆபத்தான பணிகளிலும், இரவு நேரத்திலும் பெண்களை அனுமதிக்கலாம் என்ப தெல்லாம் ஏற்புடையதல்ல. பெண் களுக்கு சமவாய்ப்பு அளிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை அரசு உருவாக்குகிறது. கார்ப்ப ரேட்டுகள், முதலாளிகள் நலனுக்காக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் மனு அளித்து, முதலமைச்சரின் கவனத் திற்கு கொண்டு செல்லக்கோரினோம். அதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.