tamilnadu

img

மனைப்பட்டா வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள்

மனைப்பட்டா வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள்

தருமபுரி, நவ. 27 - உறுதியளித்தபடி மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத வரு வாய்த் துறையைக் கண்டித்து, பாலக் கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் தலைமையில் பொது மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரம், ஜெர்த்தலாவ், பூனையன் கொட்டாய், பி. கொல்லஅள்ளி ஆகிய கிராமங்களுக்கு அரசுப் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும்; எர்ரன அள்ளி, குப்பன்கொட்டாய், வாழைத் தோட்டம் மற்றும் பஞ்சப்பள்ளி ஊராட்சி, பெரியனூர், ஏழுகுண்டூர், பஞ் சப்பள்ளி பட்டாபி நகர், ஒட்டர் திண்னை, நம்மாண்டஅள்ளி காமராஜி புரம், மாரண்டஅள்ளி நகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கல்லாங்குத்தல் அரசு புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க  வேண்டும்;  கும்மனூர் ஊராட்சிக்கு உட்பட்ட  பெரியகும்மனூர், சிக்கதோரன பெட்டம், சின்னகும்மனூர், சாமனுர் ஆகிய கிராமங்களுக்கு பாறை அரசுப் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும்; பாலக்கோடு வட்டத்திற்கு  உட்பட்ட பேவுஅள்ளி பஞ்சாயத்து, கரகூர், சீரியம்பட்டி, கண்சால்பைல், பூதிஅள்ளி, கோட்டூர், சீரண்டபுரம், ஈச்சம்பள்ளம், பேளாரஅள்ளி, மல்ல சமுத்திரம் அத்திமுட்லு பிக்கனஅள்ளி பஞ்சாயத்து, மல்லுப்பட்டி, வேப்பல அள்ளி, வெள்ளிச்சந்தை, வீராசனூர்,  வேட்ராயன்கொட்டாய், மகேந்திர மங்கலம் ஜிட்டாண்டஅள்ளி பஞ்சா யத்து, ஜிட்டாண்டஅள்ளி, குழிக்காடு, கிட்டம்பட்டி, பெரியதப்பை, சின்ன தப்பை, கொல்லுப்பட்டி, ஏரியூர் ஆகிய கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும்; பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, பாலக்கோடு வட்டத்தில் உள்ள ஏழை மக்கள் கடந்த மே 15 அன்று விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடத்தி, 2221 மனுக்களை வட்டா ட்சியரிடம் வழங்கினர். அதன்பிறகு ஆகஸ்ட் 18 அன்று மனைப்பட்டா கேட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப் போது 15 தினத்திற்குள் மனைப்பட்டா வழங்குவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், வாக்குறுதியளித்து 6 மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னைக் கண்டித்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று (நவ. 27) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கு. பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டத் தலைவர் வீ. ரவி, மாவட்டச் செயலாளர் எம். முத்து, வட்டச் செயலாளர் சி. ராஜா  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. கலாவதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கோவிந்தசாமி, தீண்டா மை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ஏ. சேகர், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என். வரத ராஜன், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஜி. நக்கீரன், மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டப் பொருளா ளர் ஜி. மாதேசன் உட்பட பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர். போராட்ட பந்தலிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.