tamilnadu

img

8 மாதமாகியும் தீர்வு காணாத தொழிலாளர் நலத் துறை பழிவாங்கப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் சிபிஎம் மாநிலச் செயலாளருடன் சந்திப்பு!

8 மாதமாகியும் தீர்வு காணாத தொழிலாளர் நலத் துறை பழிவாங்கப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் சிபிஎம் மாநிலச் செயலாளருடன் சந்திப்பு!

சென்னை, நவ. 27 - சாம்சங் தொழிலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும், தங்களின் இந்தக் கோரிக்கையை தமிழக அரசு மற்றும் முதல்வரின் கவ னத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு செல்ல வேண்டும் என்றும் சாம்சங்  தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை, சாம்சங் தொழிலாளர்கள் சந்தித்துக் கடிதம் அளித்தனர். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு முன்னணியில் நின்ற சங்கப் பொதுச்செயலாளர் உள்பட 27  நிர்வாகிகளை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. அதேபோல சாம்சங் நிறு வனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை நிர்வா கமும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக நிரந்தரத் தொழிலாளர்கள் 93 பேரை டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில், சாம்சங், எஸ்.எஸ்.  எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்க நடவடிக்கைகளை ரத்துசெய்து, தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று  கடந்த 8 மாத காலமாக தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோரிடம் தொழிலாளர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்தே, சாம்சங் தொழிலா ளர்கள் சங்கத் தலைவர் இ. முத்துக்குமார் தலைமையில், பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகத்தை, வியா ழனன்று நேரில் சந்தித்து முறையிட்டனர். நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்ட தொழி லாளர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும், வேதனைகளையும் எடுத்துரைத்தனர். அப்போது, சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சரிடம் எடுத்துரைத்து தீர்வும், நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முயற்சி எடுப்பதாக மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.