tamilnadu

img

மின்சார சட்டத்திருத்த மசோதா 2025-ஐ கைவிடக் கோரிக்கை! நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் - அதிகாரிகள் போராட்டம்!

மின்சார சட்டத்திருத்த மசோதா 2025-ஐ கைவிடக் கோரிக்கை! நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் - அதிகாரிகள் போராட்டம்!

சென்னை, நவ. 27 - மின்சார சட்டத் திருத்த மசோதா 2025-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு வலி யுறுத்தி உள்ளது. தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்பு, மின்சார சட்டத் திருத்த மசோதா-2025 ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், உத்தரப்பிரதேச மாநில மின்சார நிறுவனத்தை தனியார் மய மாக்கிடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வியாழ னன்று (நவ.27) இந்தியா முழு வதும் மின்வாரிய ஊழியர்கள், அதி காரிகள், பொறியாளர்கள் போராட்டம் நடத்தினர். தி. ஜெய்சங்கர் பேட்டி இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகம் முன்பு கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர், “மின்சார சட்டத்திருத்த மசோதா வரைவு அறிக்கையில், மின்  விநியோகம், பகிர்மான பிரிவுகளை தனியாருக்கு தர வேண்டும். மானி யங்களை சீராக குறைக்க வேண்டும் என்பன போன்ற மக்களுக்கு எதிரான அம்சங்கள் உள்ளன. எனவே அதனை திரும்பப்பெற வேண்டும்” என்றார். உ.பி. மின்வாரிய ஊழியர்க்கு ஆதரவு உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா, வார ணாசி ஆகிய இரு பகிர்மான வட்டங் களை தனியாருக்கு கொடுக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து, அங்குள்ள ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து 365 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, தனியார்மய மாக்கலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெறுவதாக கூறினார்.  தில்லியில் ஜன.30-இல் மாபெரும் பேரணி  4 சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற அனைத்து சங்கங்களும் கோரி வருகின்றன. இதனை வலியுறுத்தி ஜனவரி 30 அன்று தில்லியில் மிகப்பெரிய பேரணி  நடைபெறுகிறது. அதற்குள்ளாக சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெறாவிடில், அந்தப் போராட்டத்தில் தேசம் தழுவிய போராட்டம் அறிவிக்கப் படும்” என்றார்.