துணை முதல்வர் உதயநிதிக்கு பெ. சண்முகம் வாழ்த்து!
சென்னை, நவ. 27 - தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வியாழனன்று தமது 48-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி னார். இதையொட்டி, அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொலை பேசி மூலம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
‘எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை!’
சென்னை, நவ. 27 - எஸ்ஐஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நா யக் அறிவித்துள்ளார். தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து தந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரைக் கண்டறிய இயலாவிட்டால் பிற விவரங்களை மட்டும் நிரப்பலாம் என்று கூறியிருக்கும் அவர், தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி வரைபடம் நேபாளம் வெளியிட்ட பணத்தாளால் சர்ச்சை!
காத்மாண்டு, நவ. 27 - நேபாளத்தில், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் தாள்களை நேபாளம் வெளியிட்டுள்ளது. உத்தரகண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உரிமைக்கோரி வருகின்றன. இதனால், மூன்று நாடுகள் இடையில் எல்லைப் பிரச்சனை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில், நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.100 பணத்தாள்களில் கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை உள்ளடக்கி நேபாள வரைபடம் அச்சிட்டுள்ளது. இந்தப் புதிய பணத்தாள்கள், கடந்த 2024 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.