tamilnadu

img

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மதியம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.