ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என கேரள அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்திருப்பதை சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது;
தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் 4 தொகுப்பு சட்டங்களையும் கேரள மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம். இச்சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
மோடி அரசு தொழிலாளர்களின் உரிமைகளை களவாடும் கொடுங்கோல் ஆட்சி. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டது LDF அரசு என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் முதுகெலும்பை முறிக்கத் துடிக்கும் மோடி அரசின் 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை முறியடிப்போம். என தெரிவித்துள்ளார்
