tamilnadu

img

ஆம்னி பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை! - அமைச்சர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,000 ஆகவும், சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் ரூ.4,100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.