அனில் அம்பானி உதவியாளரை கைது செய்த அமலாக்கத்துறை
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் 7 ஆண்டு களுக்கும் மேலாக தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் அசோக் குமார் பால். இவர் அனில் அம்பா னியின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல் படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகத்திற்கு (SECI) ரூ.68 கோடிக்கும் அதிகமான போலி வங்கி உத்தரவாதத்தை அசோக் குமார் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கொல்கத்தா, புவனேஸ்வ ரம் என பல்வேறு இடங்களில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 7 வணிக வங்கிகளின் போலி டொமைன்களை (5 sbi.17313@s- bi.co.in’, ‘Indiabank.in’, ‘Indusind bank.in’, ‘pnbIndia.in’, ‘psdbank.co.in’, ‘siliguripnb.co.in’, ‘lobbank.co.in’ ‘unionbankofindia.co.in’) அசோக் குமார் பயன்படுத்தியதை அம லாக்கத்துறை உறுதி செய்தது. இதுதொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு அசோக் குமாரை கைது செய்தது. ஏற்கெனவே வங்கிக் கடன் தொடர்பான பணமோசடி வழக்கில் அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணை வளை யத்தில் உள்ள நிலையில், தற்போது அவரது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.