states

img

கர்நாடகா : மேகவெடிப்புக்கு நிகரான கனமழை

கர்நாடகா : மேகவெடிப்புக்கு நிகரான கனமழை 

வெள்ளத்தில் தத்தளித்த கோலார், மாண்டியா

பெங்களூரு  தென்னிந்திய மாநி லங்களில் பருவ மழை தீவிரமடை ந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைச்சா ரலில் உள்ள பகுதிகளில் அதீத அளவில் கனமழை வெளுத்து வாங்கி வரு கிறது. இந்நிலையில், கர்நாட கா மாநிலத்தின் கோலார், மாண்டியா மாவட்டங்களில் வியாழன் இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை மேகவெடிப்புக்கு நிகராக கனமழையால், இரண்டு மாவட்டங்களின் பெரும்பா லான பகுதிகள் வெள்ளத் தில் தத்தளித்து வரு கின்றன.  கோலார் மற்றும் மாண்டி யா மாவட்டங்களில் பல குடி யிருப்புப் பகுதிகள், சாலை கள் மற்றும் ரயில்வே சுரங் கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக கோலா ரில் காத்ரிப்பூர் ரயில்வே சுரங்கப்பாதை முற்றிலும் மழைநீரில் மூழ்கியது. இத னால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தினக்கூலிகள் கிராசிங் வழி இல்லாமல் ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்ல வேண்டியி ருந்தது.அதே போல மாண்டி யாவில் கேஎச்பி காலனி முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. மாண்டியா தாலுகாவில் ஏக்கர் கணக் கில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கோலார், மாண்டி யா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர், துமகூரூ மற்றும் தாவணகரே உள்ளிட்ட மாவட்டங்களும் கனமழையால் லேசான அளவில் இயல்புநிலையை இழந்தன. போராட்டம் அதிகாரிகளின் அலட்சி யத்தைக் கண்டித்து காத்ரிப்பூரில் வெள்ளம் நிரம்பிய சுரங்கப்பாதையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்தால் கோலார் நகரச் சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.