1500 தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வோம்!
கோவில் தொழிலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு உறுதி
சென்னை, அக். 11 - கோவில்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய தொழிலாளர்கள் பணி வரன் முறை செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உறுதி அளித்தார். தமிழ்நாடு திருக்கோவில் தொழிலா ளர்கள் யூனியன் மாநில சிறப்பு மாநாடு சனிக்கிழமை (அக்.11) சென்னையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், விலைவாசி உயர்வுக்கேற்ப வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படிகளை உயர்த்த வேண்டும். கோவில்களில் பணியாற்றும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும். மாநில யூனிய னுக்கு சென்னை நகரத்தில் ஒரு இடம் வழங்க வேண்டும். கோவில் அர்ச்சகர், பூசாரி, ஓதுவார்கள் உள்ளிட்ட உள்துறை பணியாளர்கள், துறை யின் விதிகளால் அனுமதிக்கப்பட்ட விடுப்பை எடுக்க முடிவதில்லை. எனவே, அதற்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும். கோவில் வருமானத்தில் 40 விழுக் காடு சம்பளமாக அங்கீகரித்துள்ளதை பொது நிதியாக மாற்றி ஊதியம் தர வேண் டும். பதவி உயர்வின்போது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைச்சர் இந்த மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “மாநாட் டில் வைக்கப்பட்டுள்ள 9 கோரிக்கை களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். முதற் கட்டமாக தினக்கூலி, தொகுப்பூதிய தொழி லாளர்கள் 1500 பேர் அடுத்தாண்டு பிப்ர வரி மாதத்திற்குள் பணி வரன்முறை செய்யப் படுவார்கள். வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப் படி உயர்த்தப்படும். மாநில யூனியனுக்கு சென்னை நகரத்தில் வாடகைக்கு இடம் ஒதுக்கி தரப்படும்” என்றார். மாநாட்டிற்கு மாநில பொதுச் செயலா ளர் க.ரமேஷ்குமார், துணைத் தலைவர் சு. தனசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜெ.குமார், இணைச் செயலாளர் இரா.ரமேஷ் ஆகியோர் வர வேற்றனர். பொன்னம்பல அடிகளார், சங்கத் தின் மாநில காப்பாளர் வி.கண்ணன், கௌரவத் தலைவர் அ.முத்துச்சாமி, சென்னை கோட்ட பொருளாளர் க.வெங்க டேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.சீனி வாசன் உள்ளிட்ட பலர் பேசினர். சென்னை கோட்ட துணைத் தலைவர் கே.எஸ்.யுவ ராஜ், துணைச் செயலாளர் ஜி.ரதி ஆகி யோர் நன்றி கூறினார்.