states

img

மேற்கு வங்கத்தில் மீண்டும் கொடூரம் மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத்தில் மீண்டும் கொடூரம் மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். அம்மாநிலத்தில் ஒரு பெண் முதலமைச்சராக இருந்தாலும் பெண் கள், குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மீண்டும் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு பர்து வான் மாவட்டம் சோபாபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் (வயது 23) இளங்கலை மருத் துவ பட்டப்படிப்பில் (எம்பிபிஎஸ்) 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். வெள்ளிக்கிழமை அன்று மாலை தனது ஆண் நண்பருடன் கல்லூரிக்கு அருகே  உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பி டச் சென்றுள்ளார். உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரு வரையும் 3 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளது. கல்லூரி அருகே சென்ற போது அந்த கும்பல் மாணவியின் நண்பரை சர மாரியாகத் தாக்கியுள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பியோடியுள் ளார். இதையடுத்து மாணவியை அந்த கும்பல் அருகில் உள்ள வனப்பகு திக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளது. மாணவியின் செல்போனை திருடிய அந்த கும்பல், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளது. இதையடுத்து அந்த கும்பலிட மிருந்து தப்பிய மாணவி, பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து சோபாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தொடர்ச்சியாக... மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொ டுமை செய்யப்படுவது சர்வசாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு  கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து  இந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டக் கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தற்போது சோபாபூரில் மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டுள்ளது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.