உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குறித்து சாதிய வன்மத்துடன் சித்தரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு காணொலியைப் பரப்பிய மர்ம நபர்கள் மீது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் சுமார் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். புரட்டாசி மாதம் 4ஆவது சனிக்கிழமை என்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ரூ.300 சிறப்பு கட்டணத்தில் பக்தர்கள் 5 மணி நேரமும், இலவச சர்வ தரிசனத்தில் 7 மணி நேரமும் காத்திருக் கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவ காரத்தில், மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப் பட்டதற்கு எதிராகவும், “உண்மையான குற்றவாளிகள்” மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அம்மாநிலத் தில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.