தலிபான்களை திருப்திப்படுத்திய மோடி அரசு பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுதில்லி தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி 6 நாள் கால அரசு முறை பயணமாக புதன்கிழமை அன்று இந்தியா வருகை தந்தார். முத்தகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார். இந்நிலையில், வெள்ளிக் கிழமை அன்று தில்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தகி கலந்துகொண்டார். முத்தகி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகை யாளர்கள் கூட அனுமதிக்கப்பட வில்லை. பெண் பத்திரிகையாளர்க ளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த தாகக் கூறப்படுகிறது. செய்தி யாளர்கள் சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒரு பெண் பத்திரிகையாளர்கள் கூட இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களு க்கு எதிராக கடுமையான தடை கள் விதித்து வருவது உலகத் திற்கே நன்கு தெரியும். அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலைதெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கி வைக்கும் கொள்கைகளை உடனடி யாக திரும்பப் பெறுமாறு தலிபான் களை ஐ.நா., தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை ஆப்கானிஸ் தான் தலிபான் அரசாங்கம் தொடர்ச் சியாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், இந்திய மண்ணில் தலிபான்களை திருப் திப்படுத்த, பெண் செய்தியாளர்க ளை அனுமதிக்க மறுத்து, பெண் ஒடுக்குமுறைக்கு ஒன்றிய மோடி அரசு துணை போகிறதா? என்ற கேள்வி கிளம்பியுள்ளது. அதே நேரம் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையா ளர்கள், பெண்கள் அனும திக்கப்படாததை எதிர்த்து வெளி நடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான சான்றாண்மை இல்லாமல் அவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். இது ஊடக உலகிற்கு நல்லதல்ல என பாஜக ஆதரவு “கோடி மீடியா” சாராத ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர். அதே போல நாடு முழு வதும் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். மோடி அரசு மழுப்பல் இந்நிலையில், பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள் ளது. அதில், “தில்லியில் ஆப்கா னிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தகி நடத்திய செய்தி யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எந்தவிதத் தொ டர்பும் கிடையாது” என மழுப்ப லாக விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலை வர் பிரியங்கா காந்தி கோரி யுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீக ரிப்பதாக நீங்கள் நாடகமாட வில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமை யாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது? பிரத மர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தி யுள்ளார். இந்திய பெண்களை அவமதித்த மோடி அரசு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கூறுகையில்,”ஆப்கானிஸ்தான், இந்திய அமைச்சர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆண் பத்திரிகையாளர்கள், தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படா ததை அல்லது அழைக்கப்படாத தை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். பெண் பத்திரிகையாளர்களை விலக்க தலி பான் அமைச்சரை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவ மதித்துள்ளது” என அவர் கண்ட னம் தெரிவித்துள்ளார்.