states

img

மேற்கு வங்கம்: மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது!

மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பர்தாமன் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒடிசா மாநிலம் ஜலேஷ்வர் சேர்ந்த மாணவி ஒருவர், இரவு உணவு சாப்பிடுவதற்காக தனது நண்பருடன் கல்லூரியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் மாணவியை கடத்தி சென்று கல்லூரிக்கு அருகே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் தந்தை துர்காபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தப்பிச்சென்ற நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி துர்காபூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.